செய்தி

நாளை மூடப்படவுள்ள மதுபானசாலைகள்; வெளியான அறிவிப்பு!

நாட்டில் உள்ள மதுபானசாலைகளை நாளை (03)  மூடுவதாக மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.

உலக மது ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3 அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு நாடு முழுவதும் நாளை மதுபானசாலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றங்களைத் தடுக்கவும் வெற்றிகரமான சோதனைகளை நடத்தவும் ‘1913’ துரித இலக்கம் மூலமாகவோ, 011 2 877 688 என்ற தொலைநகல் எண்ணுக்கு தொலைநகல் மூலமாகவோ அல்லது oicoptroxin/aexcise,gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு மதுவரித் திணைக்களம், பொதுமக்களைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.