செய்தி

பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்

பொலிஸ் திணைக்களத்தின் துரித அழைப்பு இலக்கங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிசார் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன் பிரகாரம் இதுவரை காலமும் 119 எனும் துரித அழைப்பு இலக்கம் மூலமாக வழங்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை வகைப்படுத்தி அவற்றுக்கு புதிய துரித அழைப்பு இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

  • பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் அறிவிக்க துரித அழைப்பு இலக்கம் -109
  • குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு – 119
  • ஏதேனும் சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் தமிழ்மொழியில் தகவல்களை வழங்குவதற்கு – 107
  • பொலிசார் மேற்கொள்ளும் ஏதேனும் மோசடிகள், இலஞ்சம் கோரல் போன்ற தகவல்களை வழங்குவதற்கு – 1997

என்றவாறாக துரித அழைப்பு இலக்கங்கள் வகைப்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.