செய்தி

ரம்புக்கனையில் ரயில் மோதி சிறுவன் உயிரிழந்த!

கேகாலை – ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல ரயில் நிலையத்தில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி  சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மெதகம பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

ரம்புக்கனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் திஸ்மல்பொல ரயில் நிலையத்திற்கு  நண்பர்களுடன் குறித்த சிறுவன் சென்றுள்ளார். 

இதன்போது, ரயில் கடவையில் இறங்கி அடுத்து ரயில் மேடைக்கு செல்லும் போது பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.