செய்தி

வாழைச்சேனையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பொண்டுகள்சேனை பூலாக்காடு சீல்லிக்கொடி பகுதியில் உள்ள குழி ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரிய வேதம் பூலாக்காடு கிரான் பகுதியை சேர்ந்த 63 வயதுடைய 8 பிள்ளைகளின் தந்தையான மூத்த தம்பி சீனித்தம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று காலை தனது வீட்டில் இருந்து பூலாக்காடு பகுதியில் உள்ள சீல்லிக்கொடி பகுதியில் உள்ள குழி ஒன்றில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். 

இந்நிலையில் அவர், இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரை உறவினர்கள் தேடி சென்ற போது அந்த பகுதியில் இன்று காலை யானை தாக்குதலில் பலியான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய சம்பவ இடத்துக்கு சென்ற கோறளைப்பற்று தீடிர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன், மற்றும் பொலிசார் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கும் படி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.