சினிமா

ஜெயிலர்2 திரைப்பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டு திகதி பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. கேரளாவில் நடந்த ஜெயிலர் 2 படப்பிடிப்பை முடித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

அப்போது ஜெயிலர் 2 வெளியீடு குறித்த கேள்விக்கு, “ஜூன் 12” என்று பதிலளித்தார்.

மேலும், படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து ஜெயிலர் திரைப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், கமல் ஹாசனுடன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

சினிமா

வசூலில் சாதனை படைக்கும் ‘குட் பேட் அக்லி’

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி என அறிவிக்கப்பட்டது.அஜித்தின்
சினிமா

‘காணாமல் போனதற்கு காரணம் இதுதான்…’நஸ்ரியா

நடிகை நஸ்ரியா சமீப நாட்களாக பொது வெளிக்கு வரவில்லை. இதற்கான காணரம் பற்றி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.கேரள திரைப்பட