செய்தி

விசா பெறத் தவறியதால் வாய்ப்பை இழந்த இலங்கை அணி

சரியான நேரத்தில் விசாக்களைப் பெறத் தவறியதால், இலங்கை வலைப்பந்தாட்ட அணி, ஸ்பெய்ன் ஜிப்ரால்டரில் நடைபெறும் வலைப்பந்து உலக இளைஞர் கிண்ணம் 2025இல் இருந்து விலகியுள்ளது.

இதனால், இலங்கை அணி அனைத்து குழு நிலை போட்டிகளையும் இழக்க நேரிட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை மற்றும் சாம்பியா ஆகிய இரண்டு அணிகளும் “தீர்க்கப்படாத பிரச்சினைகள் காரணமாக” போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டதாக உலக வலைப்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதன் விளைவாக, அவர்களின் திட்டமிடப்பட்ட போட்டிகள் தோல்விகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், போட்டி விதிகளின்படி எதிர் அனைகளுக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்பட்டன.

ஜிப்ரால்டர், ஒரு பிரிட்டிஷ் ஆளுகைப் பிரதேசமாகையால், வீரர்கள் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரகம் மூலமே விசாக்களைப் பெற வேண்டும்.

உலகம் முழுவதிலுமிருந்து 21 வயதுக்குட்பட்ட அணிகள் பங்கேற்கும் உலக இளைஞர் கிண்ணப் போட்டிகள், 2025, செப்டம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் 28 வரை ஜிப்ரால்டரில் நடைபெறுகின்றன.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.