செய்தி

மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதி இளைஞன் பலி

உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் ஹவேலியா சந்தியில் நேற்று (21) இரவு மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் ஹவேலியா பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார்.

இந்த விபத்து ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் இன்று (22) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.