செய்தி

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச 2025ஆம் ஆண்டுக்கான தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் பிற உறுப்பினர்கள் ஏற்கனவே தங்கள் சொத்து, பொறுப்பு சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.

மேலும், பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.