விளையாட்டு

புரோ கபடி லீக்:தொடர்ந்து வெற்றி பெற்ற டெல்லி

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.

இதில் நேற்றிரவு நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான தபாங் டெல்லி, தெலுங்கு டைட்டன்சை எதிர்கொண்டது.

இதில் முதல் பாதியில் 9-14 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த டெல்லி அணி பிற்பாதியில் எழுச்சி பெற்று 33-29 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்து தொடர்ந்து 6-வது வெற்றியை பெற்றது. தெலுங்கு அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அரியானா ஸ்டீலர்ஸ் 43-32 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்சை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது.

இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8 மணி), யு மும்பா- புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ