செய்தி

மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான தீர்மானம்

தீவகத்தில் 1991இல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டை தீவுப் பகுதியில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் அங்குள்ள தேவாலயக் காணியின் கிணறு உட்பட மூன்று கிணறுகளில் போட்டு மூடப்பட்டன என்று கூறப்படுவது தொடர்பில் விசாரித்து, அந்தக் கிணறுகளைச் சட்டரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த வழக்கு றேந்று(17) ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டின் தீவகப் பகுதியைப் படையினர் கைப்பற்றியபோது படையினரும் ஓர் ஒட்டுக் குழுவும் இணைந்து பலரைக் கைது செய்து, சுட்டுக் கொன்று, மண்டைதீவின் தேவாலயக் கிணறு உட்பட 3 இடங்களில் உள்ள கிணறுகளில் போட்டு மூடினர் எனக் கண் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் சில மத குருமாரும் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட கிணறுகளை அகழ உத்தரவிடக் கோரியே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் போது ஊர்காவற்துறை பொலிஸாரிடம் அகழ்வு பணியை மேற்கொள்வதற்கான வசதிகள் இல்லை என சுட்டிக்காட்டியதை அடுத்து யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் குறித்த வழக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு தொடர்பாக பொலிஸார் கால அவகாசம் கோரியதால் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.