செய்தி

சுரங்க முறைகேடு: சீனஅரசுக்கு எதிராக தீர்ப்பு

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் சீன அரசாங்கத்திற்கு சொந்தமான சுரங்க நிறுவனம் ஒன்று அங்குள்ள பகுதியை குத்தகைக்கு எடுத்து சுரங்கம் தோண்டி வருகிறது.

இந்த சுரங்கம் மூலமாக அரிய வகை கனிமங்களை வெட்டி எடுத்து உலக நாடுகளுக்கு விநியோகம் செய்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த பெப்ரவரியில் இந்த சுரங்கத்தில் இருந்த கழிவுநீர் தேக்கம் உடைந்தது. இதனால் அதில் இருந்து வெளியேறிய அதிக அளவிலான நச்சுத்தன்மை கொண்ட கழிவுநீர் ஆற்றில் கலந்தது.

இதனால் அந்த ஆற்று நீர், குடிநீருக்கு தகுதியில்லாததாக மாறியது. அந்த நீரில் இருந்த மீன்கள் செத்து மிதந்ததால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்தது.

இதனை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அந்த நாட்டு நீதிமன்றம் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.

விசாரணையில் சீன அரசுக்கு சொந்தமான அந்த நிறுவனம் ரூ.7 லட்சம் கோடி நஷ்டஈடு வழங்குமாறு தீர்ப்பு அளித்துள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.