செய்தி

அதிகரித்துள்ள கொள்ளை சம்பவங்கள்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனையும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ள நிலையில் தற்போது சினிமா பாணியில் கொள்ளைச்சமபவங்களும் இடம்பெறுவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இளையோர் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், தென்னிலங்கையில் துப்பாக்கியை காட்டி மக்களை அச்சுறுத்தி போதைப்பொருளுக்கு பணம் பறித்து வந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது இரவில் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

விபத்து ஏற்பட்டதுபோல ஒரு மாயையை சித்தரித்து சினிமா பாணியில் வீதியில் ஐந்து இளைஞர்கள் விழுந்து கிடக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இரவில் பயணிப்போர் விபத்து நடந்ததென எண்ணி அவர்கள் அருகில் சென்றால் ஆபத்து உங்களுக்கே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் .

இப்படியானவர்களை  கண்டால் வாகனத்தை நிறுத்தாது உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கி உண்மையை அறிந்துகொள்ள முயற்சியுங்கள்.

பலரும் தூரதேசங்களுக்கு பயணிப்பதற்கு இரவு நேரங்களிலேயே செல்கின்றனர். எனவே வழிப்பறி கொள்ளையர்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.