செய்தி

யாழ்-குடத்தனையில் வாள்வெட்டு; மூவர் படுகாயம்

யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் வாள் வெட்டுக்குழு மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் குடத்தனை மேற்கை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்  இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 சனிக்கிழமை  மணியளவில் வன்முறை கும்பல் வாள்கள் சகிதம் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதன்போது வீட்டில் இருந்த தளபாடங்களை அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போதிலும் வாள் வெட்டுக்குழு அங்கிருந்து வெளியேறிச் சென்றபின்னரே தாமதமாக வந்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.