செய்தி

பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த ஆலோசனை

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை, பழைய முறையில் நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது ஏற்கனவே எல்லை நிர்ணய செயல்முறை முடிவடைந்த பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்று ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருந்தார்.

எனினும், இந்தியா உட்பட்ட தரப்புக்களில் இருந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், இந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 1988ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ் நடத்த ஆலோசனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை அரசியலமைப்பை முழுமையாகவும் திறம்படவும் செயற்படுத்த, மாகாண சபைத் தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா, கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.