செய்தி

லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக பிடியாணை

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தாரக நாணயக்காரவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மாத்தறை பிரதான நீதவான் சத்துர திசாநாயக்க முன்னிலையில் நேற்று (12) அழைக்கப்பட்டது.

இதன்போது லசந்த விக்ரமசேகர நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்த நிலையில் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.