செய்தி

ரஷியா – கிழக்கு பகுதியில் பாரிய நிலநடுக்கம்

ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கம்சாட்கா கடற்கரை அருகே இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமிக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 39.5 கி.மீ. ஆளத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நிலநடுக்கத்தை தொடர்ந்து கடற்கரை பகுதிகளில் அலைகள் சுமார் 3.3 அடி உயரம் வரை எழக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.