செய்தி

அரசியலில் ஓய்வு பெறவில்லை : சமல் ராஜபக்ச

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என்று  முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனைக் கைவிட முடியாது. நான் இன்னும் ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை அவதானித்து வருகின்றேன். எமக்கு மக்கள் ஆதரவு உள்ளதா என்பதை தேர்தலில் போட்டியிட்டே கண்டறிய முடியும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சமல் ராஜபக்ச போட்டியிடவில்லை. அவரது மகன் சஷீந்திர ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பல மாதங்களுக்குப் பிறகு பொதுவெளிக்கு வந்த சமல் ராஜபக்சவிடம் அரசியல் நடவடிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.