செய்தி

யாழில் பதினெட்டு வயதுடைய இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் நேற்று(11) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 10 கிராம் 670 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவா மீட்கப்பட்டுள்ளது.

 மேலும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.