செய்தி

எல்ல விபத்து இடம்பெற்ற இடத்தில் புதியமாற்றம்

15 பேரை காவுகொண்ட எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில், மண் தடுப்புகள் மூலம் பாதுகாப்புத் தடுப்பு கட்டப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர், சட்டத்தரணி கபில ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி இரவு, தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று சுற்றுலா சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றது.

குறித்த பகுதியில் இதற்கு முன் பல வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் பல உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

எனவே அபாயகரமான விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில், வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து மண் தடுப்புக்கள் மூலம் பாதுகாப்பு தடுப்பு கட்டப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் கூறினார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.