செய்தி

குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை!

குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் களுத்துறை, ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெபெல்லகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று  முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

ஹொரணை , கெபெல்லகொட பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் தனது அயல் வீட்டுக்குச் சென்று அங்கு வசிக்கும் நபருடன் இணைந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதால் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான அயல் வீட்டில் வசிக்கும் நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.