செய்தி

எண் தகடு இன்றி நாட்டில் ஒரு லட்சம் வாகனங்கள்

கடந்த 8 மாதங்களில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 586 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 745 மோட்டார் சைக்கிள்களாகும். எனினும், வாகன எண் தகடுகள் அச்சிடுதல் ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதால், இந்தப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு எண் தகடுகள் கிடைக்கவில்லை.

எண் தகடுகள் அச்சிடும் பணி, விலை மனு கோரல் செயல்முறை மூலம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், எண் தகடுகள் அச்சிடுதல் நிறுத்தப்பட்டதால், வாகன எண் தகடுகளை தயாரிக்கும் வணிகங்களின் கட்டணங்களும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.