செய்தி

திருகோணமலையில் தீக்கிரையான விடுதி!

திருகோணமலை- அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்தானது நேற்றிரவு (05) 7.45 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்படுகின்றது.

மின்சார கோளாறு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து தீயணைப்பு படையினர் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ பற்றியமை காரணமாக ஓலையினால் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு அறை முற்றாக சேதம் அடைந்துள்ளதாகவும் எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.