காலி-பெலியத்த ரயில் பாதையில் மினுவங்கொட பிங்கே பகுதியில் ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சுமார் 75 வயதுடைய பெண் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் காலி தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

