செய்தி

போராட்டத்தில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று(04) சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் ஊழியர்களின் பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு நேற்று (03) பிற்பகல் வெளியிடப்பட்டது.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை, கொடுப்பனவு, பதவி உயர்வு வழங்கப்படாமை உட்பட 16 கோரிக்கைகளை முன்வைத்து அதன் ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.