செய்தி

மர்மமான முறையில் சாரதி உயிரிழப்பு!

சம்பூர் – பாட்டாளிபுரம் பிரதேசத்தில், வேலை செய்து வந்த, ரத்தினபுரி – எம்பிலிபிடிய பகுதியைச் சேர்ந்த, 35 வயதான பெகோ வாகன சாரதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, சம்பூர் – பாட்டாளிபுரம் பிரதேசத்தில், தற்போது குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பகுதியில் குறித்த நபர், இம்மாதம் 14ஆம் திகதியிலிருந்து, பெகோ வாகன சாரதியாக பணிபுரிந்து வருகின்றார்.

இந்தநிலையில், வெள்ளிக்கிழமை (29) மூதூர் வைத்தியசாலைக்கு சென்று, அங்கு, நோயாளர் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும்; நேற்று (30) காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேறி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியேறியவர், மூதூர் ஜபல் நகர், 64 ஆம் கட்டை பகுதியில், அவர் தங்கி இருந்து வேலைக்குச் சென்ற இடத்திலிருந்து, சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிபதியின் உத்தரவிற்கு அமைய, சடலம் பிரேத பரிசோதனைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.