செய்தி

கிளிநொச்சியில் நால்வர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோணாவில் பகுதியில் நேற்று மாலை வாள்கள் மற்றும் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று மாலை சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய நான்கு சந்தேக நபர்கள் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை சோதனையிட்டபொழுது, மறைத்து வைத்திருந்த நான்கு வாள்கள் மற்றும் 07 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை கிளிநொச்சி பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.