செய்தி

புழக்கத்தில் இரண்டாயிரம் ரூபாய் நினைவுத்தாள்

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய ரூபாய் 2000 நினைவுத்தாள் வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கிவைக்கப்பட்டது.

இது புழக்கத்திற்கான நினைவுத்தாள் என வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட ஐந்தாவது நினைவுத்தாள் இதுவாகும்.

வளர்ச்சிக்கான அடித்தளமான பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் மத்திய வங்கியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில்,

‘செழிப்புக்கான ஸ்திரத்தன்மை’ எனும் ஆண்டு விழா கருப்பொருளின் கீழ் இந்த நினைவுத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநயக்க, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே.எம்.ஏ.என் தௌலகல, உதவி ஆளுநர் கே.ஜி.பி சிறிகுமார, நாணயத் திணைக்களத்தின் தலைவர் பி.டி.ஆர் தயானந்தவும் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.