செய்தி

கொலன்னாவையில் என்புக்கூடுகள் கண்டெடுப்பு

கொலன்னாவ, பொத்துவில்கும்புர – நாகஹமுல்ல குப்பை மேட்டுக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் என்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெல்லம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் மண்டை ஓடொன்று, முதுகெலும்பு மற்றும் கால் எலும்புகள், அத்துடன் கறுப்பு தொப்பி மற்றும் மஞ்சள் நிற காற்சட்டை ஆகியவை காணப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

குப்பை மேட்டுக்கு அருகில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் பட்டம் விட்டுக்கொண்டிருந்தபோது, இந்த எச்சங்களைக் கண்டெடுத்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இறந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில் வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.