செய்தி

பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைக்க நடவடிக்கை

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான போட்டிப் பரீட்சை உரிய காலப்பகுதியில் நடத்தப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை கல்வி அமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தொழில்கோரும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளும் போது, விண்ணப்பதாரர்களின் வயதெல்லையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வயதெல்லையை நீடித்து, தற்போது ஆசிரியர் சேவையின் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.