செய்தி

இஸ்ரேலுக்கு எதிராக துருக்கியின் அதிரடிமுடிவு

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டித்து இஸ்ரேலிய விமானங்களுக்கு அதன் வான்வெளியை மூடுவதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன் தெரிவித்துள்ளார். 

துருக்கி, இஸ்ரேல் இடையே 1997ஆம் ஆண்டு முதல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. இதில் எஃகு, எண்ணெய் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவை முக்கிய வர்த்தக பொருட்கள் அடங்கும்.

ஆனால், காஸாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல அனுமதிக்கும் வரை, இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக கடந்த ஆண்டு மே மாதம் துருக்கி கூறியது.

இந்த நிலையில், இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி முற்றிலும் துண்டிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

துருக்கி, இஸ்ரேல் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2023இல் கிட்டத்தட்ட 6.8 பில்லியன் டொலர்களாக இருந்தது.

இதில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை துருக்கிய ஏற்றுமதிகள் ஆகும் என துருக்கிய புள்ளியியல் நிறுவனம் தமது தரவுகளில் கூறியது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.