செய்தி

தொலைபேசி வர்த்தக நிலையத்தில் கொள்ளை

கம்பளை பிரதான சந்தையில் அமைந்துள்ள தொலைபேசி வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு (29) கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கம்பளை நகரின், கண்டி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் கூரை வழியாக உள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பெறுமதியான தொலைபேசிகளை திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.