செய்தி

வெளிநாடொன்றில் இலங்கையர்கள் கைது!

பாதாள உலக குழுவை சேர்ந்த 6 பேர் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன், தெம்பிலி லஹிரு மற்றும் பாணந்துறை நிலங்க உள்ளிட்ட 6 பாதாள உலக குழுவினர்கள் இவ்வாறு; கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.