செய்தி

மர்மமான முறையில் இறந்து கிடந்த முகாமையாளர்

ஹட்டன், வட்டவல பகுதியில் உள்ள வெலிஓயா தோட்டத்தில் பணிபுரிந்து வந்த மூத்த உதவி தோட்ட முகாமையாளர், தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக வட்டவல பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த தோட்ட முகாமையாளர் இன்று (25) காலை கடமைக்கு சமூகமளிக்க எழுந்திருக்காததால்,

குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிபுரியும் சமையல்காரர் பார்த்த போது குளியலறைக்குள் விழுந்து கிடந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வட்டவல பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளியலறையில் வழுக்கி விழுந்து சுவரில் தலை மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.