செய்தி

ரணில் விக்ரமசிங்கவிற்கு கொலை மிரட்டல்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொலை மிரட்டல் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடுவெல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரபாத் தர்ஷன மற்றும் சிலர் இணைந்து இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொல்ல வேண்டும் என்ற கோஷத்தை உள்ளடக்கிய பதிவொன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதுடன் நாளைய தினம் வரையில் அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.