செய்தி

மன்னார் ஆயர் சுவிட்ஸர்லாந்துக்கு விஜயம்

மன்னார் ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, கடந்த வெள்ளிக்கிழமை (21.08.2025) சுவிட்ஸர்லாந்து நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 

வருடா வருடம் சுவிஸ் வாழ் தமிழ்க் கத்தோலிக்க இறைமக்கள் கொண்டாடும் மருதமடு அன்னையின் திருவிழாவானது இவ்வருடமும் சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியக இயக்குனர் அருட்பணி அ.யூட்ஸ் முரளிதரன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாட ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு வருடமும் பாசல் மாநிலத்தில் அமையப்பெற்றுள்ள மரியஸ்ரைன் திருத்தலத்தில் இடம்பெறும்; இவ்விழாவானது தவிர்க்க முடியாத காரணத்தினால் கருப்பு மாதா ஆலயத்தில் Kloster Einsiedeln திருத்தலத்தில் இம்முறை இடம்பெறவுள்ளது என்பதும் அறியத்தரப்பட்டுள்ளது. 

எனவே, இவ்விழாவானது இன்று (23.08.2025) நண்பகல் 12.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் பேரருட்கலாநிதி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆண்டகையின் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இதை முன்னிட்டே மன்னார் ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, சுவிட்ஸர்லாந்து நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.