செய்தி

தனது நண்பியை மிரட்டிய இளைஞர் ஒருவர் கைது

தனது நண்பியின் நிர்வாண காணொளி காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிரபோவதாக மிரட்டிய குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த இளைஞனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டார்.

அந்த இளம் பெண், சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் வட்ஸ்அப் மூலம் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகக் கூறி தன்னை மிரட்டியதாக குறித்த பெண் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில் இரு தரப்பு சமர்ப்பிப்புகளை பரிசீலித்த நீதவான், பிணை மனுவை நிராகரித்து, சந்தேக நபரை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.