செய்தி

மன்னார் மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு என்பன முழுமையாக நிறுத்தப்படும் வரையில் போராட்டம் நடத்தப்படும் என மன்னார் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காற்றாலை கோபுரங்களை அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்னார் பொதுமக்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று 17 ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் இன்றைய நாள் போராட்டத்துக்கு, பனங்கட்டிக்கொட்டு, செல்வநகர், எமில் நகர், இத்திக்கண்டல், தலைமன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.   

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.