செய்தி

தேசிய ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் இடைநீக்கம்

இலங்கையின் தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர் ரஞ்சன தரங்க திடீரென பதவியில் இருந்து இடைநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் பங்கேற்பாளரும் நாட்டின் சிறந்த ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளருமான அவர், எந்த காரணமும் குறிப்பிடப்படாமல் கடந்த ஜூன் மாதத்தில் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் உள்ளக இடமாற்றத்துக்கு உள்ளானார்.

அவரது திடீர் இடமாற்றம் இந்த ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் மற்றும் உலக செம்பியன்சிப் போட்டிகளுக்கான தயாரிப்புகளைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.