செய்தி

களுதாவளை பி.சபையில் பறிக்கப்படும் சுதந்திரம்

மட்டக்களப்பு- மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் அமர்வுகளில் கருத்து சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் மறுக்கப்பட்டு வருவதாக பிரதேச சபை உறுப்பினர் யோகராசா சந்திரகுமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்; மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நேற்றையதினம் (15) இடம்பெற்றது.

உறுப்பினர்களாகிய எமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இதனால் கருத்து முரண்பாடு ஏற்பட்டது மாத்திரமின்றி தவிசாளர் என்னை தாக்கவும் எத்தனித்தார்.

இதனால் நாங்கள் ஒன்பது உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறியிருந்தோம். நாம் வெளியேறியதன் பின்னர் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இனிவரும் காலங்களில் சபை அமர்வுகளின் போது தவிசாளர், உபதவிசாளர் ஆகியோரைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்த அனுமதியில்லை,சபை அமர்வுகளின் போது ஊடகங்கள் உட்பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என்பன தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானமானது எமது உரிமைகளை மீறும் செயல் என்பதுடன் ஊடக அடக்குமுறையுமாகும்.

சபையிலே இடம்பெறுகின்ற அதிகார துஸ்பிரயோகங்களும் அடக்குமுறைகளும் அடாவடிகளும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு எம்மை வெளியேற்றிவிட்டு இத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அதிகார துஸ்பிரயோகமும் ஊழலும் இடம்பெற்றுவரும் நிலையில் சபையில் இடம்பெறும் விடயங்கள் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக இவ்வாறான தீர்மானங்களை எடுப்பது ஜனநாயக மீறலும் ஊடக அடக்குமுறையுமாகும்.

உள்ளுராட்சி மன்ற சட்டதிட்டங்களுக்கு அமைய இயங்காத இச்சபை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.