செய்தி

இலங்கை மீது அமுலுக்கு வரும் புதிய வரி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளது.

 அதன்படி, இன்று முதல் நாட்டிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 20 சதவீத வரி விதிக்கும்.

டிரம்ப் ஜனாதிபதியான பின்னார் அமெரிக்காவுக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை அறிமுகப்படுத்தியபோது இலங்கை மீது 44 சதவீத வரிவிதிக்கப்பட்டது.

அமெரிக்கா அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த இலங்கை அரசாங்கம் நிவாரணம் பெற இலங்கை அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

அதன்விளைவாக இலங்கை மீது தற்போது விதிக்கப்பட்ட வரி வீதம் 20 சதவீதமாகும். அதேசமயம் , இந்த புதிய வரிக் கொள்கை கடந்த மாதம் 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதியால் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்கா விதித்த கட்டண வீதத்தை மேலும் குறைக்க பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.