செய்தி

சீனாவில் வேகமாகப் பரவும் சிக்குன்குனியா

கடந்த ஜூலை மாதம் முதல் சீனாவில் சிக்குன்குனியா பரவல் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, அந்த நாட்டில் தற்போது சிக்குன்குனியாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் பல மாகாணங்களில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த வாரத்தில் மாத்திரம் 3,000 சிக்குன்குனியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வீடுகளுக்கு அருகில் நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக 10,000 யுவான் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.