செய்தி

இலங்கைக்கு வருகை தந்த சரிகமப பாடகர்கள்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றுவதற்காக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப பாடகர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இன்று நடைபெறவுள்ள இசைநிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இவர்கள் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

ஜீ தமிழ் தொகுப்பாளினி அர்ச்சனாவுடன் “சரிகமப லிட்டில் சாம்ஸ்” பாடகர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியானது இன்று மாலை யாழ்ப்பாணம் – அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சரிகமப லிட்டில் சாம்ஸ் பாடகர்களான திவினேஸ், புவனேஸ் உள்ளிட்ட பல பாடகர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.