மட்டக்களப்பில் மினி சூறாவளி காரணமாக ஆலயமொன்றின் கூரை சேதமடைந்துள்ளது.குறித்த சம்பவம் நேற்றைய தினம் (01) இடம்பெற்றுள்ளது.
வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனையறுப்பான் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன் ஆலயத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்போது காற்று காரணமாக ஆலயத்தின் கூரைகள் பறந்துள்ளதாக தெரியவருகிறது.

