செய்தி

மட்டக்களப்பு பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில் இன்று தீச்சம்பவம் பதிவாகியுள்ளது.

குருக்கள்மடம் வடக்கு கிராம சேவை அதிகாரி, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் ஊடாக களுவாஞ்சிக்குடி பொலிஸாருடன் இணைந்நு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நவடிக்கை எடுத்தார்.

மேலும் இதே போல் கடந்த 2024 ஆண்டும் பாரியளவு, தீப்பரவல் குருக்கள்மடம் ஏத்தாலைக்குள பறவைகள் சரணாலயத்தில் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பறவைகள் சரணாலயத்திற்கு இலட்ச கணக்கிலான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்தர்ப்பத்தில் பறவைகள் எதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பேராபத்து வராமல் பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும், இவ்வாறு பாதுகாக்கப்பட்ட பிரதேசத்திற்குள் அனுமதி இன்றி உள் நுழைந்து, காட்டுத்தீயை ஏற்படுத்தியவர்கள், சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் எனவும் கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.