செய்தி

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா நேற்று(24) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றுள்ளது.

அதிகாலை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதரராகவும், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து நகுலேஸ்வரர் சமேதர நகுலாம்பிகை,

விநாயகர் மற்றும் முருகப்பொருமான் வள்ளி தெய்வயானையுடனும், கீரிமலை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து முத்துமாரி அம்மனும் எழுந்தருளி கீரிமலை புனித கண்டகி தீர்த்தத்தில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

இதில் நூற்றுக்கணக்காணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இன்று பூங்காவனம் இடம்பெறவுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.