பிரதமர் அலுவலகத்தில், TikTok சமூக ஊடகத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பில், வெறும் பொழுதுபோக்கையும் கடந்து, பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் கல்வி நடவடிக்கைகளுக்கும் TikTok சமூக ஊடகத்தை ஒரு டிஜிட்டல் கருவியாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

டிஜிட்டல் கல்வி தொடர்பான அறிவை வழங்குவதற்கான வழிமுறைகள், ஆராய்ச்சி, மற்றும் பாடத்திட்டத்திற்குத் தேவையான மாற்றங்களை உள்ளடக்குவதன் முக்கியத்துவம் குறித்து TikTok பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
அத்துடன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது மற்றும் TikTok மூலம் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

