செய்தி

இலங்கைக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு டொலர்கள்

கடந்த ஜூன் மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை 2024ஆம் ஆண்டு ஜூனில் வெளிநாட்டு பணியாளர்களால் 519.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன.

இவ்வருடம் கிடைத்த பணமானது கடந்த வருடத்தில் கிடைக்கப்பெற்ற பணத்தின் 22% அதிகரிப்பாகும் என்று மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் கிடைத்த 641.7 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது, அனுப்பப்பட்ட தொகையானது சற்று குறைந்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.