மங்கையர்

பளபளப்பான முகத்துக்கு இயற்கை வழி டிப்ஸ்

  • தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூள் கலந்து குழைத்து, அதை வெதுவெதுப்பாகச் சுடவைத்துத் தினமும் குளிப்பதற்கு முன் கண்களைச் சுற்றி பூசி, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் கருவளையம் காணாமல் போய்விடும்.
  • பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊறவைத்து காலையில் மைய அரைத்து முகத்தில் தேய்த்து வர, முகம் சிகப்பழகு பெறும்.
  • எலுமிச்சம் பழச் சாறில் பாசிப்பயறு மா கலந்து முகத்தில் தடவி, ஒருமணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் நல்ல நிறம் பெறும்.
  • அப்பிள் பழத்தை வெட்டி, தேனில் ஊற வைத்துச் சாப்பிட்டால், கண்கள் நல்ல அழகு பெறும்.
  • உதட்டில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு சிறிதளவு பவுடரைத் தேய்த்துவிட்டுப் பின்னர் போட்டால் அதிக நேரம் லிப்ஸ்டிக் அழியாமல் இருக்கும்.
  • இரண்டு தேக்கரண்டி அரிசி மா, இரண்டு தேக்கரண்டி தயிர் இவற்றைக் கலந்து இரவில் முகத்தில் தேய்த்துவிட்டுப் பின்பு நன்றாகக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், பகலில் போட்ட மேக்கப் சுத்தமாக நீங்கி, முகம் இயல்பான நிலைக்கு வந்துவிடும்.
  • தினமும் சுத்தமான ஆமணக்கு எண்ணெயைப் புருவங்களில் தேய்த்தால் புருவ முடி கறுப்பாகவும் கவர்ச்சியாகவும் தோன்றும்.
  • பால் ஏட்டில் சில துளிகள் எலுமிச்சம் பழச் சாறு கலந்து குழைத்து முகத்தில் தடவிக்கொண்டு, உலர்ந்ததும் கழுவ வேண்டும். சில நாட்கள் தொடர்ந்து இப்படிச் செய்தால் முகம் பளபளக்கும்.
  • முகம் பளபளப்பாக குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதை பஞ்சில் தொட்டு முகத்தில் பூசி அரைமணிநேரம் சென்றதும் முகத்தைக் கழுவி விடுங்கள். தினமும் இப்படிச் செய்தால் நாளடைவில் முகம் பளிச்சிடும்.

You may also like

மங்கையர்

நகங்களைப் பராமரிக்க ….

நகங்களை வளர்த்து, தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் நகப்பூச்சு பூசிக் கொள்வது பல இளம் பெண்களுக்கு விருப்பமான ஒன்று. அவ்வளவு ஆசையாக வளர்க்கும் நகங்கள் சிலருக்கு அவ்வப்போது உடைந்து
மங்கையர்

முடி வளர்ச்சிக்கு இயற்கை வீட்டு வைத்தியங்கள்

"அலோபீசியா அரேட்டா", ஒரே இடத்தில் முடி உதிர்தல் மற்றும் சில நேரங்களில் கணிக்க முடியாத அளவுக்கான முடி இழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு இயற்கையான வீட்டு வைத்திய முறை.