செய்தி

இங்கிலாந்தில் முதல் வீடு வாங்குவோருக்கு புதிய திட்டம் – 2.5% முன்பணத்துடன் வீடு வாங்க வாய்ப்பு!

இங்கிலாந்தில் முதல் முறையாக வீடு வாங்க விரும்புவோருக்கு உதவும் வகையில் “Your First Home” என்ற புதிய அரச ஆதரவு வீட்டுக் கொள்வனவுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுடைய முதல் முறை வீடு வாங்குவோர் குறைந்தபட்சம் 2.5% முன்பணம் செலுத்தி புதிய வீட்டை வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறவுள்ளனர். மேலும், வீட்டின் பெறுமதியில் 20% வரை Equity Loan அரச ஆதரவுடன் வழங்கப்படவுள்ளது. இந்த Equity Loan-க்கு ஆரம்ப காலப்பகுதியில் வட்டி அறவிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய தொகையை முன்பணமாகச் சேமிக்க முடியாதவர்களுக்கும், பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நிதி உதவி பெற முடியாதவர்களுக்கும் இந்தத் திட்டம் வீடு வாங்குவதற்கான வாய்ப்பை எளிதாக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, அதிக வருமானம் பெறுவோர் அல்லது அதிகளவு சேமிப்பைக் கொண்டிருப்போர் இந்த உதவியைப் பெறுவதை கட்டுப்படுத்தும் வகையில் குடும்ப வருமான உச்சவரம்பு மற்றும் பிராந்திய அடிப்படையிலான வீட்டு விலை உச்சவரம்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இந்தத் திட்டம் அரசின் திட்டத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படும் புதியதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு (New-build Properties) மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் பங்கேற்கும் கட்டுமான நிறுவனங்களும் இதற்கான செலவுகளுக்கு பங்களிக்க வேண்டியிருக்கும்.

இதற்கு முன்னர் இங்கிலாந்தில் நடைமுறையில் இருந்த Help to Buy Equity Loan திட்டமும் வீடு வாங்குவோருக்கு அரசின் Equity Loan உதவியை வழங்கியது. அந்தத் திட்டம் 2023ஆம் ஆண்டு முடிவடைந்தது.

புதிய “Your First Home” திட்டத்தின் செலவு, தகுதி விதிமுறைகள், குடும்ப வருமான வரம்பு, வீட்டு விலை வரம்பு மற்றும் நடைமுறைக்கு வரும் காலம் உள்ளிட்ட முழுமையான விபரங்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள Budget அறிவிப்பில் உறுதிப்படுத்தப்படவுள்ளன.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.