தகவல்கள் தொழில்நுட்பம்

AI-யின் எதிர்காலம் குறித்த முக்கிய விவாதத்தில் Meta எடுத்த அதிரடி முடிவு!

இந்த விவாதத்தில் Meta நிறுவனம் தற்போது தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. AI தொழில்நுட்பம் சில பெரிய நிறுவனங்கள் அல்லது அமைப்புகளின் கட்டுப்பாட்டில் மட்டும் இருக்கக் கூடாது என்றும், அதன் பலன்கள் பொதுமக்களுக்கும் பரவலாக கிடைக்க வேண்டும் என்றும் Meta CEO மார்க் சக்கர்பெர்க் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் Meta புதிய ‘Glimmer’ என்ற open-weight AI மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. Open-weight மாடல்களில் பயனர்கள் அதன் parameters-ஐ தங்களுக்கு தேவையான வகையில் மாற்றியமைத்து, AI செயல்படும் விதத்தை customize செய்ய முடியும்.

Glimmer குறிப்பாக data center-களை மட்டுமே சார்ந்திருக்காமல், personal computers-ல் இயங்கக்கூடிய AI மாடல்களை உருவாக்கும் நோக்கத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் AI தொழில்நுட்பத்தை தனிநபர்கள் மற்றும் developers மேலும் நெருக்கமாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகலாம்.

மார்க் சக்கர்பெர்க் வெளியிட்டுள்ள “The Future is for Everyone” என்ற நீண்ட கட்டுரையிலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் superintelligence சில நிறுவனங்களிடம் மட்டும் குவிந்து கிடக்காமல், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே அவரது பார்வையாக உள்ளது.

தனிநபர்களுக்கான AI agents, கல்வி, வேலை, தொழில் தொடக்கம், ஆராய்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் AI மனிதர்களின் திறன்களை அதிகரிக்க உதவும் என்றும் Meta நம்புகிறது. மேலும், AI-யின் மிகப்பெரிய ஆபத்து தொழில்நுட்பம் அதிக சக்தி பெறுவது மட்டுமல்ல; அதன் கட்டுப்பாடு ஒரு சில நிறுவனங்கள் அல்லது அரசுகளிடம் மட்டும் குவிவதுதான் என்றும் Zuckerberg தெரிவித்துள்ளார்.

AI மாடல்களை திறந்த முறையில் வழங்குவது புதுமை மற்றும் அணுகலை அதிகரிக்கலாம் என்றாலும், அதன் பாதுகாப்பு குறித்து சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சக்திவாய்ந்த AI தொழில்நுட்பங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், அவற்றின் வெளியீடு மற்றும் பயன்பாட்டில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதனால், AI-ஐ திறந்துவிடுவதா அல்லது கடுமையாக கட்டுப்படுத்துவதா என்ற விவாதம் வரும் காலங்களில் மேலும் தீவிரமடையக்கூடும். இந்த சூழலில் Meta, AI-யை பரவலாக மக்களிடம் கொண்டு செல்வதையே தனது முக்கிய அணுகுமுறையாக தேர்வு செய்துள்ளது.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்